Gota 4
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் நுழைகிறார் கோட்டா!!!

Share

இம்மாத இறுதியில் நாடு திரும்பவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.

கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப் பெறுவதற்காகவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, வியத்மக அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி சீதா அரம்பேபொல தேசியப் பட்டியலில் இருந்து விலகவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றம் வந்தால், சபையில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயரும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...