Dhammika Perera 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோ ஹோம் ரணில் – தம்மிக்க பெரேரா முழக்கம்!

Share

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.” – என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று வலியுறுத்தினார்.

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம் ரணிலிடம் இல்லை எனவும், நிதி அமைச்சராக அவர் முன்னெடுக்கும் ‘அரசியல் கேமும்’ நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை ரணில் தடுத்து வருகின்றார், நாட்டு மக்களை பட்டினியில் இருந்து மீட்பதற்கான திட்டமும் அவரிடம் இல்லையெனவும் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டினார்.

எனவே, பிரச்சினைகளுக்கு மத்தியில் பயணிக்காமல், நிதி அமைச்சு பதவியை ரணில் விக்கிரமசிங்க துறக்க வேண்டும் என்றார் அமைச்சர் தம்மிக்க.

அதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டமானது, நாட்டுக்கு டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை காண்பிக்கும் போராட்டமாக அமைய வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...