as
அரசியல்இலங்கைசெய்திகள்

“கோட்டா வீட்டுக்கு போ” – வெளிநாடுகளில் திரண்ட இலங்கையர்கள்

Share

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் மற்றும் அரசையும் பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி, நியூசிலாந்து, கனடா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட மக்கள், “கோட்டா வீட்டுக்கு போ” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இலங்கை மக்கள் அரசுக்கு எதிராகச் சுயமாகத் திரண்டு போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை மக்களின் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...