4 53
இலங்கைசெய்திகள்

வேறு கட்சியில் போட்டியிட்டோர் அதிரடியாக நீக்கம் : தமிழரசு மத்திய செயற்குழுவின் தீர்மானம்

Share

வேறு கட்சியில் போட்டியிட்டோர் அதிரடியாக நீக்கம் : தமிழரசு மத்திய செயற்குழுவின் தீர்மானம்

கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி வேறுகட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுவதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி – வெளிப்படுத்தும் சுமந்திரன்தெரிவித்துள்ளதுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி. சிவமோகன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல்காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரியநேத்திரன் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருக்கிறார் அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கடந்ததேர்தலில் கட்சிக்குஎதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேட்சைகுழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளது அத்துடன் வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரச்சாரம்செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதிதேர்தலில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...