இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முகப்புத்தகக் காதலால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்!

Share
முகப்புத்தகக் காதலால்
Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல்போன நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள், கிராமத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவந்துள்ளன.

அந்தச் சிறுமிகளில் ஒருவர் ‘பேஸ்புக்’ ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப் பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞர் சிறுமியை மட்டக்களப்புக்கு வருமாறு அழைத்துள்ளமையைத் தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டில் மாலைநேர கல்விக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சைக்கிளில் புறப்பட்டிருக்கின்றார்.

சைக்கிளைப் பற்றைக்காட்டுக்குள் விட்டு பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு இருவரும் சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞர் இருவரையும் காரில் ஏற்றிச் சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளமையைத் தொடர்ந்து, அவர்களை வீடு செல்ல அழைத்துக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டுள்ளார்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ். நகரப் பகுதியில் சுற்றித் திரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருள்களை வாங்கியபோது நள்ளிரவாகியுள்ளது.

இரண்டு சிறமிகளுக்கும் உதவி செய்வதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டு சென்று வீடு ஒன்றில் தங்கவைத்து, மற்றைய சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பஸ்ஸில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையைத் தொடர்ந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தைத் தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...