ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

இரண்டாவது போராட்டத்துக்கு தயாராகுங்கள்! – ரணில் அழைப்பு

Share

“ இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டது. எனவே, நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பிப்போம்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ மக்கள் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது.அதேவேளை இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது.

22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும்.கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்த சபை அமைய வேண்டும். இந்த வார இறுதிக்குள் தேசிய சபையை அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளேன்.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார் .

இலங்கை என்ற நாடு தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம். இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

‘ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருட மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியது.28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைமைத்துவத்துடன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நடத்தப்படும், கட்சியின் முதலாவது விழா இது என்பதும் விசேட அம்சமாகும்.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், மற்றும் வகிக்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி,பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஈ.பி.டி.பி தலைவரும், மீன்பிடி நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், தேசிய முஸ்லிம் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், தேசிய காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் காணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுகததாச விளையாட்டரங்கிற்கு வருகை தந்திருந்த அனைத்து இன மக்களாலும் அரங்கம் நிறைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...