முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிரமமான பயிற்சி வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் போது குறிப்பிட்ட சட்ட விதிகளுக்கு அமைவான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிபபிட்டுள்ளார்.
முன்பள்ளி ஆசிரியைகள் பட்டம் பெற்றிருக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு தனியான பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.