நல்லாட்சி அரசாங்கத்தில் தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கையொப்பமிட்ட சில வர்த்தமானி அறிவித்தல்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றநிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எனது ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத வர்த்தமானி அறிவித்தல்களில் பெரும்பாலானவை சூழல் பாதுகாப்பு கருதி வெளியிட்டவையாகும். தற்போதைய அரசாங்கம் மண், மணல் கடத்தலுக்கான அனுமதிபத்திரத்தை நீக்கியமை தமக்கு வியப்பளிப்பதாகவும் அவர் கூறினார்
“நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தேன். மின்சார கம்பத்தை பதிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர் – என்றார்.
#SriLankaNews
Leave a comment