நாளை முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மேற்கொள்ள இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பரவலாக எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்புக்கள் அண்மைக்காலமாக பதிவாகி வரும் நிலையில், சந்தையில் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு அரசு பணித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது நுகர்வோர் அதிகார சபையால் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விசேட நிபந்தனைகளின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை சந்தையில் விநியோகிக்க முடியாது.
* மெர்காப்டனின் நிலையான சதவீதம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
* ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு சிலிண்டர் பரிசோதலைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
#SriLankaNews
Leave a comment