நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய எரிவாயு வகைகள் இரண்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டொலர்கள் பற்றாக்குறை மற்றும் கடன் பத்திரங்களை வணிக வங்கிகள் வழங்காமை காரணமாக எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ளது. இந்த நிலையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு லிட்ரோ – லாஃப் எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
Leave a comment