கோட்டாவின் இல்லத்திலும் எரிவாயு கசிந்ததா..?

Gottabhaya

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்திலும் வாயு கசிவு ஏற்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

மிரிஹானவில் உள்ள அரச தலைவரின் இல்லதில் கடந்த நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, உரிய எரிவாயு நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதியின் இல்லத்திற்கு புதிய எரிவாயு தாங்கி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version