விவசாயத்தையும், மீன்பிடியையும் பலப்படுத்தி தமிழ் மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தாவிட்டால், எமது தமிழ் மக்கள் மிக மோசமான பட்டினிச் சாவை எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று (08) யாழில் ஊடக சந்திப்பை நடாத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
விவசாய அமைப்புக்கள், கால்நடை அமைப்புக்கள், இளைஞர் மற்றும் சமூக அமைப்புக்கள் இந்த நிலமையினை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் வீட்டிலே தோட்டம் செய்யக்கூடிய வசதி இருப்பவர்கள் உடனடியாக தங்களால் பயிரிடக்கூடிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை உடனடியாக செய்யவேண்டும்.
ஆகவே உறுதியான ஒரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்படவேண்டும். வருமானம் மூலத்தையும் கண்டறியப்படவேண்டும்.