பெண் சூத்திரதாரிக்கு வலை வீசும் பொலிஸார் – கொலைக்கு பெருந்தொகை பணம் ஒப்பந்தம்

5 39

பெண் சூத்திரதாரிக்கு வலை வீசும் பொலிஸார் – கொலைக்கு பெருந்தொகை பணம் ஒப்பந்தம்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று புத்தளம் பாலவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

34 வயதான மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் என முன்னாள் இராணுவ கொமாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல்வேறு பெயர்களில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கொலையை மேற்கொள்ள ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவவின் சடலத்தை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version