கந்தக்காடு, புனர்வாழ்வு முகாமில் தடுப்பில் இருந்த கைதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் படை அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ சிப்பாய்கள் இருவரும், விமானப்படையினர் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கைதியொருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை உருவானது. சுமார் 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினர்.
இந்நிலையில் 667 பேர் சரணமடைந்தனர். 57 பேரை தேடி தேடுதல் வேட்டை தொடர்கின்றது.
#SriLankaNews
Leave a comment