காலி முகத்திடல் தாக்குதல் ஐ.நா வில் எதிரொலிக்கும்!

image b881faba6f

” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது அரச அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதலானது, செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும்.”

இவ்வாறு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

மனித உரிமைகள் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உறுப்பு நாடுகள் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்விக்கணைகளைத் தொடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” மேற்படி சம்பவத்துக்கு பல நாடுகளின் தூதரகங்கள் ஏற்கனவே கண்டனத்தை வெளியிட்டுள்ளன. எனவே, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஜெனிவாத் தொடரில் நெருக்கடி நிலை உருவாகும். ” – என அவர் மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version