14 25
இலங்கைசெய்திகள்

யாழில் விபத்துக்குள்ளான பதில் அரசாங்க அதிபரின் வாகனம் : மனைவி வெளியிட்ட தகவல்

Share

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனமானது நேற்றையதினம் (23) விபத்துக்குள்ளானதில் அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து அரச அதிபரின் மனைவி ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாவட்ட செயலாளரின் மகன் அரச வாகனத்தில் பயணிக்கும் போது பாரிய விபத்துக்கு உள்ளானார்.

இதனை பல சமூக ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டமையை காணமுடிகின்றது.

இதில் உண்மைக்குப் புறம்பாக அரச வாகனம் விபத்துக்குள்ளானது என்றும், மது போதையில் வாகனத்தை செலுத்தினார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

அச்செய்திகளுக்கான உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவே இப்பதிவு இடப்படுகின்றது.

யாழ். இந்துக்கல்லுரியில் 2023 கணிதப்பிரிவில் கல்வி கற்ற எனது மகன் பழைய மாணவர்களின் கூட்டம் ஒன்றிற்காக தனது நண்பர்களுடன் சொந்த வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போதே பலாலி வீதியில் விபத்து ஏற்பட்டது.

அவர் அரசாங்க வாகனத்தில் பயணிக்கவில்லை எமது தனிப்பட்ட வாகனத்தையே பாவித்தார் என்பதுடன் அவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியிருக்கவில்லை என்பதும் பொலிஸாராலும் வைத்தியசாலையாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Steering track ஆன நிலையில் மரத்தோடு மோதி நிறுத்தியுள்ளார். இதில் வாகனம் பாரிய சேதத்திற்குள்ளான போதிலும் எனது மகனும் அவருடைய நண்பர்களும் எந்த வித உயிர் ஆபத்தும் இன்றி இறை அருளால் காப்பாற்றபட்டுள்ளார்கள்.

உடனுக்கு உடன் செய்திகளை வழங்குவது ஊடகங்களின் பொறுப்பு. ஆனால் உண்மைக்கு புறம்பாக தனிப்பட்ட விரோதங்களினாலோ அல்லது காழ்ப்புணர்ச்சியினாலோ அல்லது விறுவிறுப்பான செய்திகளை வழங்க வேண்டும் என்ற ஆதங்கத்தினாலோ சம்பந்தபட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று சிறிதளவு எண்ணமும் இல்லாமல் ஊடகங்கள் பொறுப்பு இன்றி செயற்படுவது வேதனை அளிக்கின்றது.

விபத்து என்பது யாருக்கும் எப்பொழுதும் நிகழலாம். ஒரு விபத்து சம்பவத்தை காரணம் காட்டி அரச அதிபரின் பதவிக்கு களங்கம் ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செய்திகள் வெளியிடப்பட்டமையை என்னால் அவதானிக்க முடிந்தது.

முகம் காட்டாது பொறுப்பற்ற விதத்தில் என் பிள்ளைகளின் மனதை பாதிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.

எனினும் உண்மை செய்திகளை வெளியிட்ட ஊடகங்களும் ஆறுதல் வார்த்தைகளை கூறிய அன்புள்ளங்களும் நிறையவே இருக்கின்றன அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...