தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அராலி நண்பர்கள் விளையாட்டுக் கழகத்திருக்கு 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சங்கானை இந்து இளைஞர் மன்றம் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், சங்கானை தெற்கு மாவடி இந்து இளைஞர் கழகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சங்கானை பிரதேச செயலாளர் பொ.பிரேமினி தலைமையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினருடன் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் சங்கானை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தர்சினி,
வலிமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சங்கானை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
#SrilankaNews
Leave a comment