நேற்று ஏற்பட்ட எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் வீடும் வீட்டுடனான வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது. குறித்த சம்பவம் புத்தளம் குறிஞ்சிப்பிட்டி குரக்கன்சேனையில் பதிவாகியுள்ளது.
காலையில் தேநீர் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென பாரிய சத்தத்துடன் அடுப்பு வெடித்து சிதறியதுடன் வீடு முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.
வீட்டில் இருந்த 3 பிள்ளைகளும், மருமகளும் பேரப்பிள்ளைகளும் வீட்டுக் வெளியே வந்து அயலவர் உதவியை நாடியுள்ளனர். பலகை வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கற்பிட்டி சகாத் ஒன்றியம் வீடொன்றை நிர்மாணித்து வழங்க முன்வந்துள்ளது. குறித்த குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புவோர் 0716080071, 0774277092 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#SriLankaNews

