கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த வார இறுதி இரவு ரயில் சேவை இன்று (19) முதல் முழுமையாக குளிரூட்டிய ரயில் சேவையாக இடம்பெறவுள்ளது. இதற்கு S13 Powerset ரயில் இணைக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு வெள்ளிகிழமைகளில் இரவு 10.00 க்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டும் அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறை இருந்து இரவு 10.00 க்கு புறப்படும் முற்றாக குளிரூட்டப்பட்ட புகையிரதமும் சேவையில் ஈடுபடும்.
ரயில் இருக்கைகளுக்கான முன்பதிவு வசதியுள்ள புகையிரத நிலையங்களில் மேட்கொள்ள முடியும். அல்லது. (Srilanka Railways Reservation App) செயலியினை உங்கள் கைப்பேசிகளில் நிறுவி ரயில் இருக்கை ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.
அது தவிர டயலொக் மூலமாக 444, மொபிடெல் மூலமாக 365 க்கு அழைத்தும் , இணையத்தில் https://seatreservation.railway.gov.lk மூலமாக சென்றும் ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.
இன்று இரவு (19) கொழும்பில் இருந்து தபால் ரயில் சேவை முன்னர் போன்று ஆரம்பிக்கப்படுவதால் குளிரூட்டப்பட்ட ரயில் சேவையாக வார இறுதி ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.
#SriLankaNews
1 Comment