நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் காலங்களில் ஏற்படமாட்டாது. எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலர் விடுவிக்கப்படும். தற்போது கையிருப்பிலுள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்து உள்ளது.
இவ்வாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி செய்ய நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படும் என்றும் கருத்துக்கள் வெளியாகுகின்றன.
இவை முற்றிலும் அடிப்படையற்றவை. நாட்டில் ஒருபோதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.
எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கோரப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டார் உள்ளிட்ட நாடுகளுடனும் எரிபொருள் நிவாரண அடிப்படையில் பெற பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தற்போது டொலர் கையிருப்பு 2 பில்பியன் வரை குறைவடைந்துள்ளது. இதனால் எரிபொருள் இறக்குமதிக்காக டொலரை விடுவித்தால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா என்பது குறித்தும் பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.