இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின், அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த காலங்களிலும் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் மாத்திரமே தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SrilankaNews