எரிபொருள் கப்பல் ஒன்று இன்றையதினம் நாட்டுக்கு வருகிறது.
இதன்படி, 40,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலே நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வரவிருந்த நிலையில், இன்றையதினமே நாட்டுக்குள் பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே பெட்ரோல் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews