இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.
இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை தமது எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
பெற்றோல் மற்றும் டீசல் விலை 20 ரூபாவாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய விலைகள்
- பெற்றோல் 92 ஒக்டேன் – ரூ. 450/-
- பெற்றோல் 95 ஒக்டேன் – ரூ. 540/-
- டீசல் – ரூ. 440/-
- சுப்பர் டீசல் – ரூ. 510/-
லங்கா ஐஓசி நிறுவனத்தின் புதிய விலைகள்
- பெற்றோல் ஒக்டேன் 92 – ரூ 450
- பெற்றோல் ஒக்டேன் 95 – ரூ 540
- ஓட்டோ டீசல் – ரூ 440
- சுப்பர் டீசல் – ரூ 510
#SriLankaNews