யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
இன்று அதிகாலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் யாழ்ப்பாணத்தின் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நீண்ட வரிசையில் கொள்கலன்களுடன் காத்திருந்ததனால்
பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டே காணப்பட்டன.
#SriLankaNews
Leave a comment