19 7
இலங்கைசெய்திகள்

நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…! வெளியான தகவல்

Share

நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…! வெளியான தகவல்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை திருத்தம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரி ஒருவர் ”எரிபொருள் மற்றும் எரிவாயு விலை செப்டம்பர் மாதம் வரை மாறாமல் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன்,விலை நிர்ணய சூத்திரத்திற்கு ஏற்ப எந்தவொரு விலை திருத்தமும் தேர்தல் பிரச்சாரத்தில் சாதகமான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்றுமொரு அரசாங்க வட்டார தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...