“பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அனுமதி பத்திரமுள்ள தனியார் பஸ்களுக்கு எந்தெந்த இபோச நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் உரிய வகையில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைக்கப்பெற்ற கையோடு, அதனை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதேவேளை, தமக்கு எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment