தமது பிராந்திய டிப்போக்கள் மற்றும் எரிபொருள் முனையங்களில் இருந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, 574 லோட்கள் 6,600 லீற்றர் ஓட்டோ டீசல் மற்றும் 512 லோட்கள் 6,600 லீற்றர் 92 ரக பெற்றோல் ஆகியவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் அனுப்பியுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை அறிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நேற்றும் இன்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தொகுதிகளையும் அனுப்ப தொடர்ந்து பணியாற்றிய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சேமிப்பு முனையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
.
பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினர் தொடர்ந்து தேவையான பாதுகாப்பை அளித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் உடனடியாக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எந்த வளாகத்துக்குள்ளும் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ள 20 பேருக்கும் எதிராக மேலும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இடையூறுகளில் ஈடுபட்ட ஏனைய ஊழியர்கள் கண்டறியப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment