767
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் நாளை எரிபொருள் விநியோகம்!

Share

தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை (21)
முதல்கட்டமாக குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் பின்வரும் அடிப்படையில் விநியோகிக்கப்படவுள்ளது என யாழ் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பெற்றோல் விநியோகத்தின்படி
மோட்டார் சைக்கிள் 1500 ரூபாவுக்கும்
முச்சக்கர வண்டி 2000 ரூபாவுக்கும்
கார்/வான் 7000 ரூபாவுக்கும் வழங்கப்படவுள்ளது. பெற்றோல் விநியோகத்தின் போது வாகன பதிவு இலக்கத்தின் அடிப்படையில் கீழ்வருமாறு விநியோகம் மேற்கொள்ளப்படும்.

செவ்வாய் ,சனி 0,1,2
வியாழன்,ஞாயிறு- 3, 4, 5
திங்கள் புதன் வெள்ளி- 6,7,8,9

இதற்கு மேலதிகமாக QR code முழுமையாக அமுல்படுத்தப்படும் வரையில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும். எரிபொருள் விநியோக அட்டையில் குறிப்பிடப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு மேலதிகமாக ஏதேனும் எரிபொருள் நிலையங்களில் அவ் அட்டையைப் பயன்படுத்தி பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் விநியோகிக்கப்படும்.

யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையம் அத்தியாவசிய தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் இவ் எரிபொருள் நிலையம் தவிர்ந்த ஏனைய எரிபொருள் நிலையங்களிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், தனியார் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கும், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை ஊடாக தொடர்ந்து வழமைபோன்று டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படும் .

பொதுமக்கள் வரிசையில் காத்திராது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும், விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மேலான ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....