தினேஷ் குணவர்த்தன
இலங்கைசெய்திகள்

வெள்ளியில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை : அமைச்சரவை அனுமதி!

Share

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்புச் சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பயணிகளுக்குக் கடுமையான போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், அரச ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக வாரத்தில் கடமையாற்றும் ஒரு நாளை அரச விடுமுறை தினமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...