” மக்கள் ஆசியுடன் நாடாளுமன்றம் தெரிவான சிரேஷ்ட உறுப்பினர்களை விரட்டினால், எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காணாமல்போய்விடும்.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
கட்சியின் தீர்மானத்தைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட எம்.பிக்களை கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நீக்கியது.
இது தொடர்பில் வினவியபோதே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வகித்தவரும், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டவருமான மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கட்சியின் முடிவு தொடர்பில் எமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. நான் இன்னமும் சுதந்திரக்கட்சியில்தான் இருக்கின்றேன். வேறு எங்கும் செல்லும் எண்ணம் இல்லை.
சர்வக்கட்சி அரசாங்கம் யோசனையை சுதந்திரக்கட்சியே முன்வைத்தது. எனவே, நாட்டின் நலன்கருதியே நாம் அமைச்சரானோம்.
மக்கள் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவான உறுப்பினர்களை நீக்கினால், சுதந்திரக்கட்சிக்கு எதிர்காலம் இருக்காது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment