பலமானதொரு அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைவிடல்லை – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் பலமான கூட்டணி நிச்சயம் அமையும். நாம் அவசரப்படவில்லை. 24 மணிநேரத்துக்குள் கூட்டணி அமைக்கும் தேவைப்பாடும் எமக்கு இல்லை. எதிர்கால ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை இலக்குவைத்தே செயற்படுகின்றோம். எமது முயற்சி கைக்கூடும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment