அரசிடமிருந்து மேலதிக சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ‘புதிய கூட்டணி’ கதையை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இதனை நகைச்சுவை கதையாகவே நான் பார்க்கின்றேன்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது, ஜே.வி.பியுடன் இணைவது தொடர்பில் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
” தயாசிறியின் கதைக்கு பதிலளித்து அவரின் மனதை நோகடிக்க விரும்பவில்லை. சரிப்பு மட்டுமே வருகின்றது. கூட்டணி அரசு இருக்கும்போது, அதனிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள பங்காளிகள் இவ்வாறு செயற்படுவது வழமை. அது தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.” – என்றும் எஸ்.பி. குறிப்பிட்டார்.
#SrilankaNews