கட்சியின் யாப்பு திருத்தம் ஊடாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அக் கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.
கட்சிக்குள் எல்லை கடந்த சுதந்திரம் இருப்பதாலேயே கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக உறுப்பினர்களால் சட்ட நடவடிக்கை நோக்கி நகர முடிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு,
” சர்வக்கட்சி அரசாங்கம் அமையாவிட்டால், அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை என்ற முடிவை கட்சி எடுத்திருந்தது. அதனைமீறி உறுப்பினர்கள் செயற்பட்டனர். கடையில் கட்சிக்கு எதிராகவே நீதிமன்றத்தை நாடினர். சுரேன் ராகவன், சாந்த பண்டார ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. நிமல், அமரவீர போன்றவர்கள் நீக்கப்படவில்லை. இப்படி பாகுபாடு காட்ட முடியாது. எனவே ,கட்சியின் நலன் கருதியே யாப்பு திருத்தம் செய்யப்பட்டது.
குமார வெல்கம போன்றவர்கள்தான் சுதந்திரக் கட்சியை கூறுபோட்டனர். ” – என்றார் தயாசிறி.
#SriLankaNews
Leave a comment