விவசாயிகளுக்கு இலவச டீசல்!

1672283914 1672281652 Famers S

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை நெல் விவசாயிகளுக்கு இன்று (09) முதல் இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் மக்களுக்காக ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியிருந்தது.

நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எம். எச். எல். அபேரத்ன தெரிவித்தார்.

இணையவழியில் விசேட வவுச்சர் ஊடாக ஒவ்வொரு விவசாயிக்கும் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அந்த வவுச்சரின் உத்தியோகபூர்வ வெளியீடு இன்று முற்பகல் 11.00 மணியளவில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்படி, அறுவடை நடவடிக்கைகளுக்காக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் டீசலும், 02 ஹெக்டேயருக்கு 30 லீற்றர் டீசலும் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version