நத்தார் வார இறுதி நாட்களான டிசெம்பர் 23, 24, 25ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையைப் பார்வையிடுவதற்கு குழந்தைகள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை நாட்களையொட்டி வன விலங்குள் எங்கள் நண்பன் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விலங்கியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கிணங்க டிசெம்பர் 23 முதல் 25 ஆம் திகதி வரை குழந்தைகளுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்றும் டிசெம்பர் 24ஆம் திகதியன்று சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலசவ நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment