எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை பிரான்ஸ் ஆரம்பிக்கவுள்ளது.
இதனை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, மற்றும் தென் அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து இந்த விமான நிறுவனம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு திடடமிட்டுள்ளது.
நாட்டில் சுற்றுலாத் துறையில் இது ஒரு ஏற்றத்தை உருவாக்கும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளன.
Leave a comment