இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை அகதிகளை படகு மூலம் மன்னாருக்கு அழைத்துச் சென்ற நான்கு பேர் சென்னை Q-பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலுள்ள மறுவாழ்வு முகாம்களில் வசித்த மூன்று பேர் கடந்த 12 ஆம் திகதி படகு மூலமாக மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாம்பன் முந்தல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
#SriLankaNews
Leave a comment