போதைப்பொருளுடன் கைது
இலங்கைசெய்திகள்

ஆவா குழு உறுப்பினர்கள் போதைப்பொருளுடன் கைது!

Share

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து போதைப்பொருள் , வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை அவர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என தேடப்பட்டு வரும் நல்லூர் அரசடி பகுதியைச்  சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றார் என பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த நபர் தனது நண்பர்களுடன் காரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அவர்களின் காரை பின் தொடர்ந்து சென்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர் பரமேஸ்வர சந்திக்கு அருகில் குறித்த காரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இந்த சோதனையில் காருக்குள் இருந்து  3 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் , வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காரில் பயணித்த நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...