இலங்கை பிரஜையை கடத்திய பெண் உட்பட நால்வர்

tamilni 246

இலங்கை பிரஜையை கடத்திய பெண் உட்பட நால்வர்

இலங்கை பிரஜை ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது சென்னை மண்ணடியில் இடம்பெற்றுள்ளது.

விசாரணையின்போது குறித்த இலங்கையர், தம்மை கடத்தியவர்களில் ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ள விடயம் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தபட்டவரும் அவரது நண்பர்களும் குறித்த இலங்கையரை கடத்திச் சென்ற நிலையில், அவரது மகளுக்கு தொலைபேசி ஊடாக அழைத்து15 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version