25 678e6c9140fbb
இலங்கைசெய்திகள்

வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட பொதுமக்களின் காணிகள்! விடுவிப்பது குறித்து நடவடிக்கை

Share

வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட பொதுமக்களின் காணிகள்! விடுவிப்பது குறித்து நடவடிக்கை

வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட பொதுமக்களின் காணிகளினை விடுவிப்பது தொடர்பாக காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்வதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி வாக்குறுதி வழங்கியதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்தாவது, “யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதியில் வனவள திணைக்களத்தினால் எல்லையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு எல்லையிடப்படும் நடவடிக்கையின் போது பொதுமக்களுடைய விவசாய காணிகள் உட்பட பல காணிகள் வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

எல்லையிடப்பட்ட காணிகளை வனவள திணைக்களம் விடுவிக்கப்படாமையால் எதுவித அபிவிருத்தி நடவடிக்கையினையும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட முடியாததுடன், திணைக்களங்களும் அபிவிருத்தி சார் திட்டங்களினை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்களால் எமக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாட்டின் அடிப்படையில் சுற்றாடல் அமைச்சர், வனவள பாதுகாப்பு ஆணையாளர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது வனவள திணைக்களம் தொடர்பாக பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக என்னால் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இதற்கான காத்திரமான நடவடிக்கையினை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 7
உலகம்செய்திகள்

ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டன!

சவூதி அரேபியாவின் ஷைபா (Shaybah) எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட 6 ஆளில்லா வானூர்திகள்...

02 6
செய்திகள்உலகம்

ஈராக் எண்ணெய் களஞ்சியத்தின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியமொன்றின் மீது ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...

28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...