போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல்!
ஹெரோய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தெற்குக் கடலில் பொலிஸார் மற்றும் இலங்கைக் கடற்படை நேற்றிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த போதைப்பொருள் தொகை கப்பல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கப்பலில் இருந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் கப்பல் மற்றும் ஹெரோய்ன் தொகை ஆகியவை இலங்கை கடற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment