நாட்டில் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் உற்பத்தி புரட்சிக்கு தயாராக வேண்டும். அனைவரும் இதற்காக அணிதிரள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
உரப்பிரச்சினையாலேயே இந்நிலைமை ஏற்படும். அதேவேளை, நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
#SrilankaNews