பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இலங்கையை மாத்திரம் பாதிக்கவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன, சர்வதேசத்தை முற்றுமுழுதாகப் பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
சர்வதேசத்தில் வளர்ந்த நாடுகள் கூட தற்போது பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளன.
உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவுஸ்திரேலியாவில் கூட பெரும்பான்மையான மக்களுக்கு தற்போது உணவு தேவைப்படுகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு உறவுப் பற்றாக்குறையால் இலங்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் பாதிப்பைச் சந்திக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Srilanka