உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” உரப்பிரச்சினையால் உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. அது நிவர்த்தி செய்யப்படும். அத்துடன், தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து நன்கொடையாக அரிசி கிடைக்கவுள்ளது.
மறுபுறத்தில் வீடுகளில் மரக்கறி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. அரச தரப்பிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, உணவு தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்
#SrilankaNews

