களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) இரவு 8.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால், திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களு கங்கையை அண்மித்த பகுதிகளில் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளதால் பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment