கைக்குழந்தை உட்பட ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!

IMG 20220502 WA0000.jpg01

ஆறு மாத கைக்குழந்தையுடன் 5 இலங்கையர்கள் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் கடந்த இரண்டு நாட்களாக தவித்துக் கொண்டிருந்த நிலையில், தமிழக கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

மன்னாரை சேர்ந்த ஒருவரே தனது குடும்பத்துடன் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் மண்டபம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 174 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#srilankanews

Exit mobile version