யாழ்ப்பாணம், வடராட்சி – பொலிகண்டி பகுதியில் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய படகுகளின் எல்லை தாண்டிய அத்துமீறலை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி பருத்தித்துறை – பொன்னாலை வீதியை முடக்கியும், கடற்றொழில் நடவடிக்கையினை புறக்கணித்தும் வடமராட்சி மீனவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலையில் பொலிகண்டி – ஆலடி பகுதியில் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்ட மீன்பிடி, வலைகள் மற்றும் படகு என்பவற்றை தீயிட்டு எரித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment