Death
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு!!

Share

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற இச்சம்பவத்தில் நியந்தன் ரித்திக்குமார் (வயது-8) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

IMG 20211219 WA0111

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

குறித்த சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவன் தோட்டக்காணியில் பட்டம் ஏற்றி விளையாடிவிட்டு, சகோதரியுடன் இணைந்து தோட்டக்காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளான்.

VideoCapture 20211219 181626

இதனையடுத்து சகோதரி உறவினர்களிடம் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, உறவினர்கள் கிணற்றில் தேடிய போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராசா, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க அறிக்கையிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...