யாழ்ப்பாணத்தில், இன்று மீனவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்திய இழுவை படகுகளின் எல்லை தாண்டிய வருகையை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்கக்கோரி, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண நீரியல் வளத் திணைக்களத்துக்கு முன்னால் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதோடு படகுகளில் சேதமாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுவதைத் தடுக்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Leave a comment