நடுக்கடலில் சண்டை! – 11 மீனவர்கள் காயம்!

1665902370 1665900973 india L

சர்வதேச கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காரைக்காலைச் சேர்ந்த 07 மீனவர்களும், மயிலாடுதுறையைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து 04 படகுகளில் வந்த சுமார் 20 பேர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக காயமடைந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மீனவர்கள் தற்போது காரைக்கால் மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version